News
தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்பட காட்சிகளை வீடியோ பதிவு செய்து சமூகவலைத் தளத்தில் பதிவிட்ட கண்டி நபர் பொலிஸாரால் கைது

பிரபல சிங்கள திரைப்படமான ‘சிங்கபாஹு’வை வீடியோவாக பதிவு செய்து யூடியூப்பில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் 24 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்திரைப்படத்தின் வீடியோ, கட்டுகஸ்தோட்டை, சீகிரி திரையரங்கில் பதிவுசெய்து யூடியூபில் வெளியிட்ட கண்டியைச் சேர்ந்த சந்தேக நபர், பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வியாழக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கண்டி பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

