ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு வழிவிட்டு, அமைதியான அதிகார மாற்றத்தை ஏற்றுக்கொண்டு ரணில் ஓய்வுபெற வேண்டும் என அனுரகுமார வேண்டுகோள்
இந்த தேர்தல் இலங்கையின் வரலாற்றை மாற்றும் தேர்தலாக அமையும் என தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பஞ்சிகாவத்தை அபேசிங்கராம விகாரையில் நிறுவப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையின் வரலாற்றை மாற்றும் தேர்தலாக இந்தத் தேர்தல் அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன். காலம் காலமாக ஆட்சி அமைக்கவும், ஆட்சியைக் கவிழ்க்கவும், ஆட்சியை மாற்றவும், தலைவர்களை மாற்றவும் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்தல் மிகவும் பலமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இலங்கையின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை, வெற்றியின் பின்னர், ஜனநாயகத்தின் சிறப்பியல்பு என்னவென்றால், எந்தவொரு நபரும் தனக்கு விருப்பமான ஒரு அரசியல் இயக்கத்திற்கு வேலை செய்ய உரிமை உண்டு. அந்த உரிமையை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.
மேலும் தேர்தல் முடிவுகளின் பின்னர் அமைதியான அதிகார மாற்றத்திற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார் ஜே.வி.பி/என்.பி.பி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க .
ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக அடிப்படையில் வழிவிட்டு ரணில் ஓய்வுபெறுவாரென நம்புவதாகவும் அநுரகுமார தெரிவித்துள்ளார்