News
இணைந்து செயல்பட தயார் ; அமெரிக்க உயர் ஸ்தானிகர் அனுரவுக்கு வாழ்த்து
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்து அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் செய்தி வெளியிட்டுள்ளார்.
இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளை அமைதியான முறையில் நடைமுறைப்படுத்தியமைக்காக நாம் வாழ்த்துகின்றோம் எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது செய்தியில், வலுவான அமெரிக்க ஸ்ரீலங்கா பங்காளித்துவத்தைப் பாராட்டுவதாகவும், பகிரப்பட்ட முன்னுரிமைகளில் ஒன்றாகச் செயல்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.