News

நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 35 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை இழந்தனர்.

ஜனாதிபதி வேட்பாளர்களில் 35 பேர் கட்டுப்பணத்தை இழந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



12.5 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறத் தவறியதன் காரணமாக, 35 பேரின் கட்டுப்பணம் அரசால் கையகப்படுத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



அதனடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கே கட்டுப்பணம் கிடைக்குமென அவர் தெரிவித்துள்ளார்.



2024 ஜனாதிபதித் தேர்தலில் 79% வாக்குகளே பதிவாகின.



2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தோரின் வீதம் 83% என தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.



இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 3.5 மில்லியன் மக்கள் வாக்களிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button