கொழும்பில் விமர்சையாக கொண்டாடப்பட்ட சவூதி அரேபியாவின் 94 வது தேசிய தின நிகழ்வு ( Photos)
அஸ்ஹர் ஆதம்
சவூதி அரேபியாவின் 94 வது தேசிய தினத்தையொட்டி கொழும்பிலுள்ள சஊதி அரேபிய தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று இலங்கைக்கான சஊதி அரேபியத்தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி தலைமையில் ஷங்ரி-லா ஹோட்டலில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்றது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயகவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்
கலந்து கொண்டார்.
இவர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் கலந்து கொண்ட முதலாவது உத்தியோக பூர்வமான நிகழ்வு என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
இவர் இங்கு உரையாற்றுகையில்
சஊதி அரேபியாவுக்கும் இலங்கைக்குமிடையில் மிக நீண்டகால இருந்து வரும் நட்புறவு அனுர குமார திஸாநாயக தலைமையிலான அரசாங்கத்தில் மேலும் வலுப்படுத்தப்படும் சஊதி அரேபியாவில் தொழில் புரியும் சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் தொழிற்பிரச்சினைகளில் அதிக கரிசனை காட்டப்படும் அத்துடன் அவர்களின் குடும்பங்களின் பாதுகாப்புக்களும் உறுதி செய்யப்படுமெனவும் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி கருத்துத்தெரிவிக்கையில்
இரு நாடுகளுக்குமிடையிலான
பரஸ்பர உறவை வலுப்படுத்த தன்னாலான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இளவசர் முகமது பின் சல்மான் மற்றும் இரு புனித பள்ளிவாயல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல சஊத் ஆகியோரின் ஆசிர்வாதத்துடன் இலங்கையின் அபிவிருத்திக்கான அனைத்து ஒத்துழைப்புக்களும் எதிர் காலத்தில் தொடர்ந்தும் வழங்கப்படும்
இரு நாடுகளும் வர்த்தகம், முதலீடு, கலாசாரம் மற்றும் மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இரு நாடுகளுக்குமிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு இரு மக்களும் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும், இரு நாடுகளின் இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஊப் ஹக்கீம் எம்.ஏ.சுமந்திரன் ஏ.எச்.எம்.பெளஸி
அலி ஸாஹிர் மெளலான.எம்.எஸ்.தெளபீக் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் உட்பட
வெளிநாட்டுத் தூதுவர்கள் உயரிஸ்தானிகர்கள் இராஜதந்திரிகள் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜயவர்த்தன மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் சஊதி அரேபியத்தூதுரக அதிகாரிகள்
இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் சமூக சேவை றிறுவனங்ளின் பிரதிநிதிகள் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் மற்றும் முக்கிய உலமாக்கள் ஊடகப்பிரதானிகள் முப்படைகளின் முக்கியஸ்தர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.நிகழ்வில் 94 ஆவது தேசிய தினத்தையொட்டி ஞாபகார்த்த கேக் ஒன்றும் பிரதம அதிதியாகக்கலந்து கொண்ட
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கைக்கான சஊதி அரேபியத்தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜயவர்த்தன ஆகியோரால்
வெட்டி வைக்கப்பட்டது.
அஸ்ஹர் ஆதம்