News
ஜனாதிபதியின் நியமனங்கள் தொடர்பில் கம்மன்பில விமர்சனம்

ஜனாதிபதியின் நியமனங்கள் தொடர்பில் கம்மன்பில விமர்சனம் முன்வைத்துள்ளார்.
நிருவாக சேவையின் உயர் பதவியான ஜனாதிபதி செயலாளர் பதவிக்கு தனது கெம்பஸ் நண்பரான கணிஷ்ட அதிகாரி ஒருவரை நியமித்துள்ளதாக விமர்சித்துள்ள அவர் கணிஷ்ட அதிகாரி ஒருவரை உச்ச பதவிக்கு நியமித்த்தால் அமைச்சு செயலாளர்கள் அவரை ஏற்கொள்ள மாட்டார்கள்.இது தனது பொலிஸ் நண்பரை பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமித்தமை போன்றதாகும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய குற்றத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டவரை மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளாராக நியமித்துள்ளமை தொடர்பில் விமர்சித்துள்ள அவர் இப்படியான நியமனத்தினால் சட்டத்தினை முறையாக நிலைநாட்ட முடியுமா என கேள்வி எழுப்பினார்.

