பொருளாதாரம்,அறிவு,கலாச்சாரம், ஒழுக்கம் என அனைத்து அம்சங்களிலும் வளமான நாட்டைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.

பொருளாதாரம், அறிவு, கலாச்சாரம், ஒழுக்கம் என அனைத்து அம்சங்களிலும் வளமான நாட்டைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என கண்டி கட்டுக்களை ஜும்மா பள்ளிவாசலுக்கு ஆசிர்வாதம் பெறுவதற்காக பிரதம மந்திரி டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் 28ம் திகதி வருகை தந்த போது இவ்வாறு கூறினார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இந்த நாட்டில் நாங்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளோம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த தேசத்தின் குடிமக்களாகிய நாம் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு மிக முக்கியமான ஒன்று, கல்வித்துறையில் நாம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்,ஏனென்றால் கல்வித் துறையை சரிசெய்தால், மற்ற அனைத்தும் நாட்டில் உள்ள விஷயங்கள் சரி செய்யப்படும். இது ஒரு புதிய மறுமலர்ச்சியின் ஆரம்பம்.
பொருளாதாரம், அறிவு, கலாச்சாரம், ஒழுக்கம் என அனைத்து அம்சங்களிலும் வளமான நாட்டைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்ற செய்தியை முன்வைக்கிறேன் என குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் கண்டி மஸ்ஜித் சம்மேளனத்தின் தலைவர் கே ஆர் ஏ சித்திக் மற்றும் பல முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

