News
தேர்தல் செலவிற்காக 1100 கோடி ரூபாவை விடுவித்த ஜனாதிபதி

பொதுத் தேர்தல் நவம்பர் 14, 2024 அன்று நடைபெற உள்ள நிலையிக், வேட்புமனுவின் இறுதி நாள் அக்டோபர் 4.2024 ஆகும்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பொதுத் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாவை விடுவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று தெரிவித்தார்.
ரத்நாயக்க, பொதுத் தேர்தலுக்குத் தேவையான மொத்த நிதித் தொகையாக எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாவை விடுவிப்பதற்கான உரிய ஆவணத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பூர்வாங்க விடயங்கள் தொடர்பிலான இரண்டு சந்திப்புகள் ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றன.

