News
தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் நிச்சயம் கிடைக்கும்

தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் நிச்சயம் கிடைக்கும் என்றும், அதற்காக குறுகிய தனிப்பட்ட இலக்குகள் அற்ற, மோசடி அல்லது ஊழல் எதிலும் ஈடுபடாத சிறந்த குழுவை முன்வைப்போம் என்றும் ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர் திரு டில்வின் சில்வா தெரிவித்தார்.
இவ்வாறு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் அணிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தமிழ், முஸ்லிம், பெண்கள் பிரதிநிதித்துவத்தை கருத்திற் கொண்டு தேசிய மக்கள் சக்தி இந்தப் பட்டியலைத் தயாரிக்கும்என்றும் அவர் கூறினார்.

