News

எனக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 7 வாகனங்களை திருப்பி கொடுத்துவிட்டேன் இப்போது என்னிடம் 4  வாகனங்கள் மட்டுமே உள்ளன ; எனக்கு ஓய்வூதியம் வழங்கப்படாததால் என் காணிகளை விற்பனை செய்தே வாழ்க்கை நடத்துகிறேன் ;  சந்திரிக்கா தெரிவிப்பு

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தனக்கு ஓய்வூதியம் சரியாக வழங்கப்படவில்லையென சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.



ஊடகவியலார் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.



இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,



“மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் எனக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை 2015க்குப் பிறகு நான் அதை கேட்கவுமில்லை, மற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி எனக்கு ஓய்வூதியம் வழங்கவில்லையென அரசு தெரிந்திருக்கவுமில்லை. பிறகு 94 ஆயிரம் வழங்கப்பட்டது. அது தான் எனக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியமாகும். அதன்பிறகு நான் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றும் வழங்கினேன். எனது சொந்த உபயோகத்திற்காக தனி கணக்கை திறந்து, பல சமூக நடவடிக்கைகளுக்கு நான் அதை பயன்படுத்தினேன்.

ஜனாதிபதி பதவியிலிருந்து ஒய்வு பெற்றுக்கொண்ட போது வங்கிக்கணக்கு மேலதிக பற்று நிலையில் காணப்பட்டது. இதுவரையில் காணிகளை விற்பனை செய்தே வாழ்க்கை நடத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திடமிருந்து தமக்கு எதுவும் கிடைக்கப்பெறுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அரசாங்கத்தால் வழங்கப்பட்ட  வாகனங்களில் 7 வாகனங்களை திருப்பி அளித்துள்ளேன். இப்போது எனக்கு நான்கு கார்கள் உள்ளன, அவற்றில் ஒன்று பயணத்திற்காக, இரண்டு பாதுகாப்பிற்காக, மற்றும் ஒன்று தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துகிறேன். அதிகமென வாகனங்களை திருப்பிகொடுத்த ஒருவர் நான் மட்டும் தான். நான் அரசாங்கத்திலிருந்து உணவருந்தினேன் என கூறும்போது நினைவுக்கு வருவது சில அரசியல்வாதிகளின் உணவுக்கான பற்றுசீட்டை அரசு தான் கொடுத்தது. ஒருபோதும் அதை நான் செய்யவில்லை.



எனது பிள்ளைகள், மாமனார், மாமி மற்றும் என்னுடைய தனிப்பட்ட சேவையாளர்கள் 3 பேர் எனது வீட்டில் இருந்தனர் வங்கியிலிருந்து வரும் மேலதிக பற்றிலிருந்துதான் எங்களது உணவு, மற்றைய செலவுகளை பார்த்துக்கொண்டேன். 12 வருட அரசியல் வாழ்க்கையில் தனது செந்த செலவுக்காக அரசிடமிருந்து எந்த பணத்தையும் நான் பெறவில்லை.



தனது அரசியல் காலத்தில் சில அரசியல்வாதிகள் என்னிடம் தொடர்ந்து தொல்லை செய்ததால் 12 வருடத்தில் 4 கார்களுக்கு மாத்திரம் அனுமதிப்பத்திரம் வழங்கினேன். அந்த காலத்தில் பொருளாதாரம் நன்றாக இருந்தது ஆனால் நான் கார்களுக்கு அனுமதிப்பத்திரம் வாங்கவில்லை வேண்டாமென கூறிவிட்டேன். இதை வேண்டாமென கூறியது நான் மட்டும்தான். ஹெக்டர் கொப்பேகடுவ என்பவரும் வேண்டாமென கூறிவிட்டு பஸ்ஸில் வீட்டுக்குச் சென்றார். பஸ்ஸில் செல்வதற்கு எனக்கு வெட்கமில்லை. என அவர் தெரிவித்தார் – என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button