இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், உணவு, மருந்து கைவசம் வைத்து பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் கோரிக்கை
இஸ்ரேல் மீது ஈரான் நேற்றிரவு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
மேலும், இஸ்ரேலில் உள்ள சகல இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளதாக அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவித்தல் விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமது உத்தியோகபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார,
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பாக தொடர்ந்தும் அவதானத்துடன் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தரப்பினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், மறு அறிவித்தல் வரை இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு, தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் தேவையான உணவு, மருந்து மற்றும் குடிநீர் என்பவற்றை வைத்திருக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.