News

நண்பனின் காதலியை சந்திப்பதற்காக சென்ற பாடசாலை மாணவன் அ*டிவாங்கி உயிரிழப்பு ( நண்பனும், காதலியும் எஸ்கேப் )

நண்பனின் காதலியை சந்திப்பதற்காக சென்ற பாடசாலை மாணவன் , கும்பலொன்றினால் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக மாத்தளை மஹாவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உல்பத்தமடவள,  நாளந்த தோட்டத்தை சேர்ந்த கவுடுபெலெல்ல கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 17 வயதுடைய மோர்கன் யுகேஷ் என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

குறித்த மாணவன் தனது நண்பர்கள் இருவருடன் , நண்பனின் காதலியான பாடசாலை மாணவியை சந்திப்பதற்காக செவ்வாய்க்கிழமை (01) மாலை 5.30 மணியளவில், மடவலஉல்பத்த ஆத்திஸ்மலை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த போது கொடவெல பிரதேசத்தில் அருகில் வைத்து இனந்தெரியாத கும்பலால் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் .

இதன்போது ஏனைய இருவர் தப்பியோடியுள்ளதுடன் குறித்த மாணவன் தாக்குதலுக்குள்ளாகி தரையில் விழுந்து கிடந்த நிலையில் அப் பகுதி மக்களால் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரியவந்துள்ளது .

பாடசாலை மாணவியின் காதலனும் மற்றைய மாணவனும் தாக்குதலில் இருந்து தப்பி ஓடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பில் , மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button