ஜனாதிபதியின் எண்ணக்கரு…. பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்த, 116,000 மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக் கருவின்படி பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் ‘ஜனாதிபதி புலமைப் பரிசில்’ திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டில் 116,000 மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்பட உள்ளன.
க.பொ.த. உயர்தரம் கற்கும் 6 ஆயிரம் மாணவர்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபா வீதம் 24 மாதங்களுக்கு வழங்கப்படும் புலமைப் பரிசில் திட்டத்திற்காக 824 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தரம் ஒன்று முதல் 11 வரையான ஒரு லட்சம் மாணவர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபா வீதம் 12 மாதங்களுக்கு புலமைப் பரிசில் வழங்கவிருப்பதோடு இதற்காக 3 ஆயிரத்து 600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரிவென மற்றும் பிக்கு கல்வி நிறுவனங்களில் சாதாரண தரம் கற்கும் மாணவருக்கான புலமைப் பரிசில் திட்டத்திற்காக 288 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. க.பொ.த உயர்தரம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் பிரிவில் கற்கும் பிக்கு மாணவருக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்காக 720 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்பு பரிவர்த்தனை ஆணைக்குழுவும் ஜனாதிபதி நிதியமும் இணைந்து இந்த புலமைப் பரிசில்களை வழங்குகின்றன.