News
மஹிந்த ராஜபக்ஷவின் வீரகட்டிய கார்ல்டன் தோட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த த்ரீ பேஸ் மின் இணைப்பு வசதி இன்று அகற்றப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகட்டிய கார்ல்டன் தோட்டத்திற்கு பயன்படுத்திய மின்சாரம் வழங்கிய பல த்ரீ பேஸ் மின் இணைப்பு வசதி இன்று பிற்பகல் மின்சார சபை ஊழியர்களினால் அகற்றப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினருக்கு உள்ள சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டு உள்ள வசதிகளை அகற்றும் அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் வீரகட்டிய கார்ல்டன் தோட்டத்திற்கு மின்சாரம் வழங்கிய இரண்டு இணைப்புகள் அகற்றப்பட்டதாக மின்சார சபையின் வலஸ்முல்ல பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கார்ல்டன் தோட்டத்தில் 03 த்ரீ பேஸ் மின் இணைப்புகள் போடப்பட்டுள்ளதாகவும் அவற்றில் இரண்டு அகற்றப்படும் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

