News

ராஜபக்சேக்கள் கொள்ளையடித்த சொத்துகள் தொடர்பான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்

திருடர்களைப் பிடித்தீர்களா?திருடர்களைப் பிடித்தீர்களா?  என திருடர்கள் ஏன் கேட்கிறார்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


மக்களிடம் இருந்து ராஜபக்சே கொள்ளையடித்த சொத்துகள் இலங்கையில் உள்ளதா அல்லது வெளிநாட்டில் உள்ளதா, சொத்துக்களாக உள்ளதா அல்லது பங்குச் சந்தையில் உள்ளதா என்பதை விரைவில் வெளியிடத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் நியமிக்கப்பட்டுள்ளதால் சட்டிபானை கடைக்குள் புகுந்த மாடு போன்று செயற்பட வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுஜன பெரமுன போன்று சமகி ஜன பலவேகய மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள திருடர்களின் கண்ணாமூச்சி ஆட்டம்  முடிவுக்கு கொண்டு வரப்படும் எனவும்..  இது அவர்களின் கடைசி சில மணிநேரங்களாகவும் இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button