எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து பிரிவினருக்கும் நியாமான பிரதிநிதித்துவம் செய்யப்படுவதை உறுதி செய்யமாறு கோரி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களிடம் SLOGAN (Sri Lankans Oversease Group for the Nation) வேண்டுகோள் !
SLOGAN
“Sri Lankans Overseas” Group: Action for the Nation
දේශය වෙනුවෙන් ක්රියාකාරීවීම: “විදේශගත ශ්රීලාංකික” සමූහය தேசத்திற்கான நடவடிக்கை: “வெளிநாட்டு இலங்கையர்” குழுமம்
திகதி: 06/10/2024
மேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களுக்கு,
எதிர்வரும் பாராளுமன்றத்தில் தேசத்தின் அனைத்துப்பிரிவினரும் நியாயமான விகிதாசாரத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறும் பொருத்தமான வேட்பாளர்கள் வேட்பாளர் பட்டியல்களில் இடம்பெறுவதை உறுதி செய்யுமாறும் கோரும் மனு
நாங்கள் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையைச்சேர்ந்த தொழில் வல்லுனர்கள் குழுமம் ஒன்றாவோம். எமது அன்புக்குரிய தாய் நாட்டின் ஜனாதிபதியாக மேன்மை தங்கிய நீங்கள் தெரிவு செய்யப்பட்ட சரித்திர நிகழ்வு குறித்த எமது உளமார்ந்த வாழ்த்துக்களை முதற்கண் நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். அத்துடன் இந்நிகழ்வு இலங்கையை அமைதியான, செல்வம்மிக்க, உண்மையான ஜனநாயகம்மிக்க, ஊழலற்ற, பொருளாதாரத்திலும் தொழில்நுட்பத்திலும் முன்னேற்றமடைந்த, நல்லாட்சியைக்கடைப்பிடிக்கும், இன சமத்துவத்தையும் மத சுதந்திரத்தையும் உறுதி செய்யும், வன்முறையற்ற, சட்டத்தின் ஆட்சியைக்கடைப்பிடிக்கும் தேசம் ஒன்றை உருவாக்கும் என்று நம்பிக்கை கொண்டு அதற்காகப்பிரார்த்தனை புரிகிறோம்.
பதவியேற்ற ஒரு வார காலத்திற்குள் நீங்கள் மேற்கொண்ட உடனடியானவையும் உன்னதமானவையுமான, நல்லாட்சிக்கான உங்களது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் நடவடிக்கைகளை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். அத்துடன், மாகாண ஆளுநர் பதவிகளுக்கான உங்களது அதிபொருத்தமான தெரிவுகளை பெரும் திருப்தியுடன் நாங்கள் நோக்குகின்றோம். மேலும் உங்களது நன்மாற்றத்தைக்கொண்டுவரும் அளவானதும் சாந்தமானதுமான அணுகுமுறை அமைதியான ஆட்சிமாற்றத்தை உறுதிப்படுத்தியதுடன் பலவீனப்பட்டுப்பட்டுள்ள பொருளாதார நிலவரத்தை சஞ்சலப்படுத்தாமலும் அமைந்திருந்தது என ஒப்புதல் அளிக்காமல் இருப்பது எமக்குப்பொருத்தமற்றதாகும்.
பின்வருமாறு அமைந்த உங்களது தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை குறித்த எமது மனப்பூர்வமான பாராட்டுக்களையும் நாங்கள் இத்தால் தெரிவித்துக் கொள்கிறோம்: ” எம்மை சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கை தேசத்தவராக ஒரே கொடியின் கீழ் கொண்டுவர இதுவரை நாட்டை ஆட்சி செய்த பிரபுக்கள் குழுவினருக்கு முடியாமல் போய்விட்டது. அதற்காக அவர்கள் செய்ததோ தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அந்தந்த இனத்துவங்கள் பிளவுபட்ட குழுக்களாக அவர்களுக்கிடையில் முரண்பாடுகளை தீவிரப்படுத்தி பேணி வருவதாகும். எமது கொள்கைகள் இதற்காக மேற்கொள்ள வேண்டிய எண்ணக்கரு சார்ந்த, பொருண்மையான, கட்டமைப்புச் சார்ந்த மற்றும் முனைப்பான பல இடையீடுகளை இனங்கண்டுள்ளது. அனைத்து இனங்களுக்கும் இலங்கையர் என்ற பொதுவான எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கின்ற இடவசதி எம்மால் அமைத்துக் கொடுக்கப்படும். உற்பத்தி பொருளாதாரமொன்றை திட்டமிடுவதிலிருந்து நன்மைகள் பகிர்ந்து செல்லும் வரையான செயற்பாங்கில் அனைத்து இனத்தவர்களையும் எமது பங்காளிகளாக மாற்றிக்கொள்வது எமது திடசங்கற்பம்” ஆகும்.
தேசத்திற்கான தங்களது மேற்படி முன்னோக்கை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். தேசிய மக்கள் சக்தி கொண்டு வந்துள்ள நேர்மறையான சமூகச்சூழலினாலும் இனத்துவக்கட்சிகளினதும் ஏனைய தேசியக்கட்சிகளினதும் தோல்வியினாலும், இம்முறை மிகப்பெரும் அளவிலான வாக்குகளை சிறுபான்மையின வாக்காளர்கள் தேசிய மக்கள் சக்திக்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அளிப்பார்கள் என நாங்கள் உறுதியாக எதிர்பார்க்கிறோம். இதனடிப்படையில், ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் உரிய விகிதத்திலான வேட்பாளர்கள் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுவதை நீங்களும் தேசிய மக்கள் சக்தி கட்சியும் உறுதிசெய்து இவ்விடயம் சம்பந்தமான அரசியலமைப்பு உரிமைகளை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் நியாயமான ரீதியிலும் உளவார்த்தமான ரீதியிலும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
மேலும் வேட்பாளர்கள் கட்சியில் மூப்பு அடிப்படையில் மாத்திரம் தெரிவுசெய்யப்பட்டால், அது மூலநோக்கத்தையே தோற்கடித்துவிடும். நீங்களே பலமுறை நன்றாகக்கூறியிருப்பது போல, வினைத்திறன் மிக்க ஒரு பாராளுமன்றம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இன்றியமையாதது. தெளிவாகவே ஒரு பாராளுமன்றத்தின் வினைத்திறனானது, தேசத்தைக்கட்டி எழுப்புவதற்கு பங்களிப்புச் செய்யக்கூடிய அதனது உறுப்பினர்களின் தரத்திலேயே தங்கியுள்ளது. எனவே, வேட்பாளர்களை சமூகப்பரம்பலிலிருந்து அவர்களின் விவேகம், தலைமைத்துவத்திறமை, நேர்மை, கடந்தகால சாதனைகள், சமூகத்தொடர்பு, கல்வித்தகைமை மற்றும் முன்னோக்கு ஆகிய ஆகிய தகுதிகாண் அளவுகோள்கள் அடிப்படையில் தெரிவு செய்யுமாறு தங்களையும் தேசிய மக்கள் சக்தியையும் நாங்கள் வினயமாக மனுச்செய்து வேண்டுகிறோம்.
நிதி மற்றும் பொருள் வளங்களையும் முதலீடுகளையும் திறன்கள் மற்றும் நிபுணத்துவத்தையும் வழங்கல் செய்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்யும் நோக்குடன் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் ஆவலாய் உள்ளோம் என்பதையும் இத்தால் தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்களது மிகப் பெறுமதிவாய்ந்த நேரத்திற்கும் கவனத்திற்கும் எங்களது மனப்பூர்வமான நன்றி.
இங்கனம்
தேசத்திற்கான நடவடிக்கை: “வெளிநாட்டு இலங்கையர்” குழுமம்
ஐக்கிய ராஜ்யம் – ஐரோப்பா – மத்திய கிழக்கு – அவுஸ்ரேலியா – வட அமெரிக்கா
sloganglobal@gmail.com : +447502173410 : +447956215351 : +447985111160 : +96899151717
Name of the signatory Profession & Domicile
Dr. (Eng) A M I Sadhique University Lecturer/Space Scientist – UK
Lr. Mohamed Sameem Aboosalih Consultant LLB (Col) LLM(Eng) AAL – UK
Dr. Mohamed Rizan Jameel Consultant Physician – Qatar
Dr. M Y M Siddeek Retired Associate Professor – UK
Mr. Mubarak Seeni Mohamed Chartered Quantity Surveyor – Oman
Dr. Vajna Rafeek Specialist General Practitioner- Australia
Eng. Shifry Muhammed Chartered Structural Engineer – UK
Lr. Zareena Abdul Azeez Legal Consultant, Int HR Advocate
Lr. Mohamed Naleem Ismail Solicitor – UK
Dr. Faisz Mohamed Consultant Paediatrician – UK
Eng. Mubeen Maraikarthamby Chartered Civil Engineer – UK
Eng. Idrees Omerdeen Chartered Mechanical Engineer – UK
Dr. Abdul Majeed Shakir Speciality Doctor – UK
Dr. Kamal Naser Consultant Physician – UK
Dr. Mohamed Niyas Registrar in Urology – Oman
Eng. Mohamed Uwais Senior Engineer – Qatar
Eng. Shuraik Seeni Mohamed Chartered Civil Engineer – Bahrain
Dr. Zulfika Ismail Educationist/Lecturer – Canada
Dr. Shamith Sheeth Jamadleen Medical Doctor – Australia
Dr. Ilma Razick Medical Doctor – Australia
Lr. Ahamed Nazeem Mohamed Mansoor Solicitor – UK
Lr. Mohamed Fahmy Mohideen Bawa Solicitor – UK
Mr. Azkar Samsudeen Chief Financial Officer – UAE
Mr. Anas Rahman Accountant – UK
Lr. Nazeem Mansoor Solicitor – UK
Dr. Shaifullah Yoosuflebbe Specialist GP – Australia
Lr. Mustapha Bathuruzamaan Barrister at Law – UK
Eng. Amjed Sulaimalebbe Project Manager – UK
Mr. Muise Wahabdeen Human Rights Advocate- Geneva
Dr. Faizal Aliyar General Practitioner- Australia
Eng. Mohamed Siraj Social Entrepreneur, USA