News

றிஸாத்தின் இரட்டை வேடம் : அம்பாறையில் ஹராமானது திருகோணமலையில் எப்படி ஹலாலானது – மாநகர சபை முன்னாள் உறுப்பினர் காட்டம் !

இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்து, ஜனாஸாக்களை எரிப்பதற்கு உதவியவர்கள் உள்ள கூட்டணியிலும் எமது கட்சி இணையாது. அம்பாறை மாவட்டத்தில், இவ்விடயம்தான் இழுபறியில் உள்ளது. இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ள அணியில், நாம் இணையப்போவதில்லை. இவர்களைச் சேர்த்தால் அம்பாறையில் தனித்தே மயில் சின்னத்தில் போட்டியிடுவோம். “புத்தளம் மாவட்டத்திலும் இந்த நியதியே பின்பற்றப்படும். இது குறித்து தீர்க்கமான முடிவை எடுக்குமாறு கட்சியின் புத்தளம் மாவட்ட உயர்பீடத்துக்கு அறிவித்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான பீ.டி. ஜமால் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பகிரங்க கடிதத்தில்,

அம்பாறையில் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்து, ஜனாஸாக்களை எரிப்பதற்கு உதவியவர்களாக றிசாத் அவர்களினால் கூறப்படும் மு.கா பிரதித் தலைவர்களான பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர்கள் உள்ள கூட்டணியில் அம்பாறையில் இணைய முடியாது என்று கூறியுள்ள றிசாத் அவர்கள் அதே இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்து,ஜனாஸாக்களை எரிப்பதற்கு உதவியவர்களாக றிசாத் அவர்களினால் கூறப்படும் மு.கா தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.தொளபீக் பிரதிநிதித்துவப்படுத்தும் திருகோணமலையில் மு.காவுடன் இணைந்து போட்டியிடுவதானது அம்பாறையில் ஹராமாகியது எப்படி திருகோணமலையில் ஹலாலானது? என்ற கேள்வியெழுப்பியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அம்பாறையில் மு.கா, ம.கா, ஐ.ம.சக்தி என்பன இணைந்து போட்டியிடுகின்ற போது தங்களை விட அதிக மக்களின் அமோக செல்வாக்கை பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், எமது கட்சியின் பிரதித் தலைவர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம் ஆகியோர்கள் மீண்டும் மக்கள் வாக்குகளினால் பாராளுமன்ற உறுப்பினர்களாகி விடுவார்கள்.

தனது கட்சியின் வேட்பாளர்கள் தோல்வியை தழுவ நேரிடும் என்ற பயத்தினாலும் எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம் போன்றோர்களின் மக்கள் செல்வாக்குக்கு மத்தியில் நின்று பிடிக்க முடியாது என்ற வகையிலுமே முன்னாள் அமைச்சர் றிசாத் இப்படியான பயத்தின் உளறல்களை வெளியிட்டு வருகிறார் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை.

முஸ்லிங்களின் எதிரியாக நோக்கப்படும் சம்பிக்கவுடன் நன்றாக உறவாடிக்கொண்டு ஜனாஸா எரிப்பை பற்றியும், முஸ்லிம் சமூக அக்கறைகள் பற்றியும் றிசாத் போன்றவர்கள் பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Recent Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker