News
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரண்டு இலங்கை இராணுவத்தினர் காயம்.

லெபனானில் அமைதி காக்கும் படையில் கடமையாற்றும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இருவர் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல் காரணமாக காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைகள் அமைந்துள்ள தெற்கு லெபனானில் உள்ள நகோவுரா பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தற்போது தெற்கு லெபனானில் சுமார் 10,000 ஐ.நா அமைதி காக்கும் படையினர் பணியாற்றி வருகின்றனர்

