ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரத்தை நடத்தியதால், பொதுத் தேர்தலில் பாரிய பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியமில்லை ; லால்காந்த
பொதுச் சொத்துக்களை எந்த வகையிலும் பிரசாரத்திற்கு பயன்படுத்தாமல் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் தேசிய மக்கள் சக்தி நாட்டுக்கு புதிய முன்னுதாரணமாக அமையும் என NPP செயற்குழு உறுப்பினரும் கண்டி மாவட்ட அணி தலைவருமான K.D.லால்காந்த தெரிவித்தார்.
NPP எப்போதும் முன்மாதிரியான தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாகவும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை வகித்தாலும், கடந்த அரசாங்கங்களைப் போன்று பொதுச் சொத்துக்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.
கண்டி மாவட்டத்திற்கான NPP நியமனப் பட்டியலை கையளித்ததன் பின்னர் கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே லால்காந்த இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் NPP வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரத்தை நடத்தியதால், பொதுத் தேர்தலில் அக்கட்சி பாரிய பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.