News

சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ” சொகுசு வாகனம்” ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல்

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவத்தின் சகோதரர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த வாகனம் ஒன்று சனிக்கிழமை (12) மாலை மீட்கப்பட்டுள்ள நிலையில் ‘சொகுசு வாகனம் மீட்கப்பட்டுள்ளதாக சகோதர மொழி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன



அரசாங்கத்தினால் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்படும் வாகனங்கள் ஏதேனும் ஒரு இடத்தில் மோசடியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ மறைத்து வைக்கப்பட்டு பாழடைந்த நிலையில் விடப்பட்டால் அது தொடர்பில் தெரிவிக்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட நிலையில், குறித்த வாகனம் மீட்கப்பட்டு நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார். மேற்கொண்டு வருகின்றனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button