News
கொலைக்கேசில் தேடப்படும் நபரை கண்டுபிடிக்க பொலிஸாருக்கு உதவுங்கள்
கொழும்பு கோட்டையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பொலிஸார் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
கோட்டை ரெக்லமேஷன் வீதியில் சந்தேக நபர், ஒருவரை கூரிய ஆயுதத்தால் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி – 071-8591555 குற்றப் புலனாய்வுப் பிரிவு – கோட்டை – 071-8594405 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.