News

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் புரியுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டுகோள்

தற்போது நமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண காலநிலை காரணமாக நம் நாட்டு மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம்.

இந்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்டுள்ளோருக்கு இன, மத பேதமின்றி உதவிக் கரம் நீட்டி தம்மால் முடிந்த நிவாரண நடவடிக்கைகளைச் செய்வது இஸ்லாம் எமக்கு காட்டித்தந்துள்ள தார்மீக கடமையாகும்.

அந்த வகையில், எமது நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட, பிரதேச மஸ்ஜித் சம்மேளனங்களும், ஆலிம்களும் ஏனைய நலன்புரி அமைப்புகளோடு இணைந்து, அவ்வப்பிரதேச தனவந்தர்களுடைய உதவி ஒத்தாசைகளைப் பெற்று, பாதிப்புற்ற மக்களுக்கு உதவிகளை செய்யுமாறும் அவர்களுக்கான தகுந்த நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுக்கிறது.

மேலும் இப்படிப்பட்ட இக்கட்டான நேரங்களில் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த இஸ்திஃபார், துஆக்கள் போன்ற விடயங்களில் மக்கள் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.



அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா

பதில்த் தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா



அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ACJU/NGS/2024/394
2024.10.13 (1446.04.09)

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button