News

தகாத தொடர்பில் இருந்த ஆணும் பெண்ணும் வீடொன்றினுள் இருந்து சடலாமாக மீட்பு

பாணந்துறை கல்கொட ஸ்ரீ மகா விகாரஸ்த வீதியிலுள்ள வீடொன்றில் ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பெண்ணின் சடலம்  வீட்டின் தரையிலும் , ஆணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலும் காணப்பட்டதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் தகாத தொடர்பில் இருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் பெண்ணை கொலை செய்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

47 வயதுடைய ஆணும் 42 வயதுடைய பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button