நாடளாவிய ரீதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் பலதரபட்ட தேவைகளை பூர்த்தி செய்துவரும் Voice of Need அமைப்பின் தலைமை அலுவலகம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது

Voice of Need அமைப்பின் தலைமை அலுவலகம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
………………………………..
நாடளாவிய ரீதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் பலதரபட்ட தேவைகளை பூர்த்தி செய்து வந்த
‘Voice of Need’ அமைப்பின் தலைமை அலுவலகம் கொழும்பில் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கபட்டது.
இவ்வமைப்பு கடந்த காலங்களில் தேவையுடையோருக்கான இலவச 90 குழாய் நீர் மற்றும் ஆள் துளைகிணறு திட்டங்களும் . விதவைகளுக்கான கோழி பண்ணை திட்டங்களும் வறிய பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும்
உலர் உணவு திட்டங்களும் போன்ற
பல நூறு சேவைகளை இலவசமாக செய்து வந்துள்ளதோடு.
அதன் சேவைகளை மேலும் விஸ்தரிக்கும் நோக்கோடு தனது தலைமையகத்தை கொழும்பில் நேற்று திறந்து வைத்தது.
இத்திறப்பு விழாவின் போது நிறுவன தலைவர்களான
சஸான் மக்கீன் . பஸால் ஹமீத் . இம்ரான் இம்திஷாம். பர்ஹான் நெய்னார்
ஆகியோருடன் நிறுவன செயற்குழு உறுப்பினர்களான அஸ்ஷேக் எம்.சாஜீர் உஸ்வி
இலங்கை இம்ரான் நெய்னார்.
முஹம்மத் இஸ்தாக்
ஆகியோரின் பங்குபற்றுதலுடன்
விஷேடஅதிதிகளாக
அகீல் ஜூனைத்
இர்ஃபான்
வசீம் முக்தார்
பஸ்ருல்லாஹ்
ரியாஸ்
மாஸில் முஹம்மத்
சஸ்லி மகீன்
ஹிமாஸ் இர்ஃபான்
முஹம்மத் இர்ஷாத்
சியாத் நவ்சாத்
ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.











