பிரசித்தப்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தால் அறிக்கையை கையளிக்க தயார் ..
ஈஸ்டர் தாக்குதல் ஜனாதிபதி விசாரணை கமிட்டி அறிக்கை தனக்கு எவ்வாறு கிடைத்தது என்பதை விசாரிக்க முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து குறித்த அறிக்கையை லீக் செய்தது யார் என்பதை விசாரணை செய்யுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளியிடப்படாத ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகளை வெளியிடுமாறு அமைச்சர் விஜித ஹேரத் நேற்று விடுத்த சவாலுக்கு இன்று பதிலளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சியில் இருக்கும் போது ஜனாதிபதி விசாரணை கமிட்டி அறிக்கையை பிரசித்தப்படுத்துமாறு கூறிய அரசு தற்போது அறிக்கையை வெளியிட தயங்குவது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.
தன்னிடம் இருக்கும் இரண்டு அறிக்கைகளும் கைக்கு கிடைத்தும் அதனை உடனடியாக வெளியிடுவோம் என அரசு உத்தரவாதம் வழங்கினால் மட்டுமே தான் அந்த அறிக்கை பிரதிகளை அரசுக்கு வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.