VIDEO > பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்துக்கொண்டு, சூன் பாண் வண்டியில் தப்பிச்சென்ற திருடன்
தெஹிவளை, வைத்திய வீதி, தீபானந்த மாவத்தையில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் தாலிக் கொடியை அறுத்துக்கொண்டு, நபரொருவர் அங்கிருந்த பான் விற்பனை செய்யும் முச்சக்கரவண்டியில் தப்பிச்செல்லும் காட்சி அங்கிருந்த CCTV கமராக்களில் பதிவாகியுள்ளது.
கடந்த 11ஆம் திகதி 60 வயதுடைய பெண் ஒருவரே இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.
சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான தாலிக்கொடி மற்றும் மாலையை திருடிய சந்தேக நபர் பான் விற்பனை செய்யும் முச்சக்கரவண்டியில் தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து CCTV காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டி இரத்மலானை தர்மராம வீதியில் உள்ள பேக்கரி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சந்தேகநபர் 13,470 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கல்கிஸ்ஸ – படோவிட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.