முடியாது என்பதற்கும் பொய் கூறுவதற்கும் வித்தியாசம் உள்ளது.

அவரைப் போன்று நானும் அனுராதபுரத்தின் திஸாநாயக்க தான் என்பதை அனுரகுமார திஸாநாயக்க ஞாபகப்படுத்த வேண்டும் எனவும், முடியாது என்பதற்கும் பொய் கூறுவதற்கும் வித்தியாசம் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று (17) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிந்து சில நாட்கள் மற்றும் மாதங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என தற்போதைய ஜனாதிபதியும் அவரது அணியினரும் தெளிவாக கூறிய போதிலும் அவ்வாறான வாக்குறுதியை அந்த அணி வழங்கவில்லை எனவும் மக்களுக்காக அவ்வாறு கூறவில்லை எனவும் தற்போது கூற துவங்கியுள்ளனர் என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்காக ஏதேனும் வாக்குறுதிகளை வழங்கினால் அதனை அரசியல் களத்தில் கூறவில்லை என கூற வேண்டாம் என அநுரகுமார உள்ளிட்ட அனைவரையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி மீது இந்நாட்டு மக்கள் வைத்துள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் அழிந்து வருவதாகவும், நாளுக்கு நாள் இழக்கப்படுவதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.

