News
நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 150க்கும் மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றும்

நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 150க்கும் மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றும் என அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி திரு.சுனில் வட்டகல கூறுகிறார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களிக்காத மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு ஒளிபரப்பான நெத் நியூஸ் நான்காம் பரிமாண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி திரு.சுனில் வட்டகல இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

