ஈஸ்டர் அறிக்கையில் “அரச ரகசியம்” என மறைப்பதற்கு ஒன்றும் இல்லை ; ஹக்கீம்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையில் “அரச ரகசியம்” என மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என மு கா தலைவர் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உதய கம்மன்பில கூறும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பாகங்களை பாராளுமன்றிற்கு வழங்க வேண்டும் என என்னோடு சேர்ந்து ஜனாதிபதி அனுரகுமாரவும் போராடினார் என அவர் குறிப்பிட்ட ரவுப் ஹக்கீம் அரச ரகசியம் என மறைப்பதற்கு ஒன்று இல்லை.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஷானி அபேசேகர மற்றும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவும் இதை விட தகவல்கள் கூறிவிட்டார்கள்.
இவ்வாறான நிலையில் சந்தேக நபர்களை தேடிப்பிடித்து அவர்களுக்கு வழக்கு பதிவு செய்யவேண்டும்.
பேச்சு சுதந்திரத்திற்கு சவால் விடும் வகையில் இது தொடர்பில் கருத்து வெளியிடும் ஒருவரை (கம்மன்பில) சிறையில் அடைக்க முயற்சிப்பது தொடர்பில் நாம் கவலையடைகிறோம்.