News
மௌலவி எம்.எம். அயூப்கான், கம்போடியா நாட்டில் உயிரிழப்பு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – 2 ஆம் வட்டாரம் ஜீ.எஸ்.வீதியைச் சேர்ந்த நபரொருவர் கம்போடியாவில் கடந்த வியாழக்கிழமை (11) உயிரிழந்துள்ளார்.
தொழில் நிமித்தம் சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் இலங்கையிலிருந்து சென்ற இவர் தனது அறையில் இருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கலேவெல பகுதியைச் சேர்ந்தவரும் ஓட்டமாவடி பகுதியில் திருமணம் முடித்து வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய மௌலவி எம்.எம்.அயூப்கான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் உடல் கம்போடியா நாட்டில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குடும்பத்தினர் மேலும் தெரிவித்தனர்.
– எச்.எம்.எம்.பர்ஸான்
(மீராவோடை செய்தியாளர்)