News
கல்பிட்டி பிரதேசத்தில் பெஜரோ ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளை மோதியதில் ஒருவர் பலி
கல்பிட்டி சேத்தபொல மாவத்தையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.
வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மிட்சுபிஷி பெஜேரோ ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு பாதையை விட்டு விலகி சென்று உள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் படுகாயமடைந்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.