News

சுற்றுலாத்துறைக்கு எந்த பாதிப்பும் இல்லை ! நேற்றும் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்க்கு வந்துள்ளார்கள்..

அறுகம்பே தாக்குதல் எச்சரிக்கை தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் கூறினார்.

அறுக்கம்பே விவகாரத்தினால் சுற்றுலாத்துறைக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறிய நேற்றும் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்க்கு வந்துள்ளார்கள் எனவும் ஏற்கனவே நாட்டில் உள்ள இஸ்ரேலியர்கள் மிகவும் சந்தேஷமாக விடுமுறையை கழித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டினர், இஸ்ரேலியர்கள் அல்லது வேறு எவருக்கும் எதிரான தாக்குதல்கள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை, ஏனெனில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.இந்த நாட்டில் இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரும் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர்,

“மத்திய கிழக்கின் யுத்த சூழ்நிலையில் இலங்கை வந்துள்ள சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பாகும்.

சில தகவல்கள் வெளியாகின.. இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு சில தடைகள் வரலாம் என்று.”

“இதுபற்றி தகவல் புலானய்வு பிரிவிடம் இருந்து கிடைத்தது.அந்த தகவல் கிடைத்ததும் உடனடியாக செயல்பட்டோம்.இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சரியாக ஒரு மாதமாகிறது. “இந்த மாதத்தில் பலமுறை கூடினோம்.”

தகவல் கிடைத்ததும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் அறுகம்பே, பண்டாரவளை நீர்வீழ்ச்சி, மாத்தறை வெலிகம மற்றும் அஹுங்கல்ல கடற்கரைகளுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

“இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சபையில் இந்த தகவல் ஆழமாக விவாதிக்கப்பட்டது. புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸாரால் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்கிடமான தகவலின் அடிப்படையில், இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் அறிந்தோ அல்லது அறியாமலோ ஏதேனும் பதற்ற நிலையை உருவாக்க முயன்றார்களா? என விசாரிக்கப்படுகின்றனர்.

அவர்களிடம் இருந்து தகவல் பெறப்பட்டு வருகிறது. கிடைத்த தகவலின் அடிப்படையில், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

Recent Articles

Back to top button