News

இஸ்ரேல் நாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட சந்தேகத்தில் மூவர் கைது !

இஸ்ரேல் நாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட சந்தேகத்தில் மூவர் கைது

இஸ்ரேல் நாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட சந்தேகத்தில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மாவனல்லை, கொழும்பு , யாழ்ப்பானம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மக்கள் பாதுகாப்பு அமைச்சர்,

இலங்கையில் மட்டுமின்றி, வேறு பல நாடுகளிலும் இஸ்ரேலியர்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் இருக்கிறது.

எவ்வாறாயினும் தற்போது சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கூடும் பகுதிகளிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முப்படையினர் நாடு தழுவிய ரீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன தொடர்ந்தும் அவர்களை எவரேனும் வழிநடத்தியிருந்தால்,விசாரணையின் பின்னரே அதனை கூற முடியும்.எனவே, பொதுமக்கள் இது குறித்து பீதியடைய வேண்டிய அவசியமில்லை.

அத்துடன், ஏதேனும் தாக்குதல்கள் தொடர்பான திட்டம் குறித்து பொதுமக்கள் தகவல்களை அறிந்திருந்தால் அது தொடர்பில் காவல்துறையின் 119 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அல்லது காவல்துறை தலைமையகத்திற்கு தகவல்களை வழங்க முடியும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சிலர் இந்த சம்பவத்தை அரசியலாக்க முற்படுகின்றனர்.அவர்கள் நாடு தொடர்பில் முதலில் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய நாட்டு பிரஜைகளுக்கு ஆபத்து இருக்கிறது என்ற இலங்கையில் அடிப்படையில், அந்தநாட்டின் பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை நடத்தியதன் காரணமாக அவர்களுக்கு அதிக விபரங்கள் கிடைக்கப்பெற்றிருக்கலாம்ழ்

இது பயங்கரவாத அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றினால் மேற்கொள்ளப்படவிருந்த செயல் அல்ல. திட்டமிடப்பட்டு அதேநேரம், ஏப்ரல்-21 தாக்குதலுக்கு சமமான தாக்குதல் அச்சுறுத்தலும் இல்லை.

Recent Articles

Back to top button