News
கஸ்டம்ஸில் சிக்கிய 5,020 தொன் இஞ்சியை சலுகை விலையில் ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்திற்கு வழங்க தீர்மானம்

இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் உற்பத்திக்காக மருத்துவ குணம் கொண்ட இஞ்சியை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படும் 87 வகையான மருந்துகளுக்கு மருத்துவ குணம் கொண்ட இஞ்சி ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுவதுடன், சந்தையில் மருத்துவ குணம் கொண்ட இஞ்சிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத்தினால் 5,020 தொன் மருத்தவ இஞ்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்திற்கு குறித்த மருந்து இஞ்சியை சலுகை விலையில் பெற்றுக்கொள்வதற்கு சுகாதார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

