News

ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது மற்றொரு மாடல் அழகி பாலியல் குற்றச்சாட்டு

நவம்பர் 5ஆம் திகதி  அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது தற்போது  மற்றொரு மாடல் அழகி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

டிரம்ப், ஏற்கனவே  ஜீன் கரோல் என்ற எழுத்தாளரை வன்புணர்வு செய்ய முயன்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளவர் ஆவார். முன்னதாக டிரம்ப் பெண்களை பற்றி அந்தரங்கமாக பேசும் பதிவு ஒன்று ஆக்சஸ் ஹாலிவுட் டேப்ஸ் என்று பெயரில் 2016 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தல் சமயத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது டிரம்ப் மீது மற்றொரு மாடல் அழகி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஸ்டேஷி வில்லியம்ஸ் என்ற அந்த மாடல் பிரபலம், ஆங்கில தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 1993ஆம் ஆண்டு டிரம்ப் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், “கடந்த 1992 ஆம் ஆண்டில் கிறிஸ்துமஸ் சமயத்தில் நடந்த விருந்து ஒன்றில் வைத்து ட்ரம்ப்பை முதன்முதலில் சந்தித்தேன். அப்போது உடனிருந்த எனது நண்பர் எப்ஸ்டின் உடன் பேசிக் கொண்டே என்னிடம் டிரம்ப் பாலியல் ரீதியாக அத்துமீறினார்.

“எனக்கு அப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. எதுவும் பேசமுடியாத நிலைக்கு ஆளானேன். இந்த சம்பவம் பற்றி எனது நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன்.

“இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து ட்ரம்ப்பிடம் இருந்து எனக்கு ஒரு போஸ்ட் கார்டு மட்டும் வந்தது” என்று, ஸ்டேஷி, அந்த பேட்டியில் தெரிவித்தார்.

இதற்கிடையே இது எதிர் போட்டியாளர் கமலா ஹாரிஸ் தரப்பின் சதிவேலை என்று டிரம்ப் தரப்பு தெரிவித்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button