News

AI பெண்ணுடன் காதல் வயப்பட்டு மனவிரக்தியால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமும் பதிவானது

அமெரிக்காவில் AI பெண் கதாப்பாத்திரத்துடன் பேசி காதல் வயப்பட்ட சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு துறைகளிலும் பல வேலைகளுக்கு ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் சில நிறுவனங்கள் அந்தரங்க உரையாடல்களுக்கும் ஏஐ சாட் பாட் (AI Chat Bot)களை உருவாக்கி வருகின்றன.

அவ்வாறாக ஒரு அமெரிக்க நிறுவனம் பிரபலமான கேம் ஆப் த்ரோன்ஸ் சீரிஸில் வரும் டெனேரியஸ் டார்கேரியன் கதாப்பாத்திரத்தை போன்ற ஒரு உரையாடல் சாட் பாட்டை தயாரித்துள்ளது.

அதை புளோரிடா மாகாணத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் பயன்படுத்தி வந்துள்ளார். அந்த ஏஐ பெண்ணுடன் பேசத் தொடங்கிய சிறுவன் அந்த ஏஐயுடன் காதல், காமம் என எல்லை தாண்டி உரையாடலை நிகழ்த்தி, கண்ணுக்கு தெரியாத அந்த ஏஐ மீது காதலில் விழுந்துள்ளான்.

பெரும்பாலும் ஏஐயுடன் உரையாடுவதே கதி என இருந்த சிறுவன், தனது கனவு காதலியை அடைய முடியாத நிலை குறித்து வருந்தியுள்ளான். இந்த விரக்தி சிறுவனை பாதித்த நிலையில் தான் இறந்தாவது தனது ஏஐ காதலியோடு சேர வேண்டும் என நினைத்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button