Unofficial 🗳️காலி – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 17 தேர்தல் வட்டாரங்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி 15 வட்டாரங்களில் வென்றது
எல்பிட்டிய பிரதேச சபைக்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி 15 தேர்தல் வட்டாரங்களில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள இரண்டு தேர்தல் வட்டாரங்களில் சஜித்தின் சமகி ஜன பலவேக வென்றுள்ளது . பிட்டுவளை , அவித்தாவ ஆகிய வட்டாரங்களில் சஜித்தின் சமகி ஜன பலவேக வென்ற தொகுதிகள்.
அல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் மொத்த தேர்தல் வட்டாரங்களின் எண்ணிக்கை 17 ஆகும்.
சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 28 ஆகவும் அவர்களில் 11 பேர் விகிதாசார முறையின் கீழ் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
இறுதி முடிவு தேர்தல் விரைவில் ஆணையரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட உள்ளது
*Unofficial results of Elpitiya Pradeshiya Saba
1. NPP :- 17281
2. SJB :- 8613
3. SLPP :- 3697
4. Independent group:- 2744
5. පොදුජන එක්සත් පෙරමුණ:- 2576
6. පොදුජන එක්සත් නිදහස් සන්ධානය :- 1280
7. ජාතික ජනතා පක්ෂය:- 504
8. දෙවන පරපුර :- 363
9. ජනසෙත පෙරමුණ :- 50