News

இலங்கை அரசியலமைப்பின்படி ஜனாதிபதி இன்னும் ஒரு வருடம் நீடிக்க வாய்ப்புக்கள் உள்ளது ; ஹிஸ்புல்லாஹ்

இலங்கை அரசியலமைப்பின்படி ஜனாதிபதி இன்னும் ஒருவருடம் நீடிக்க வாய்ப்புக்கள் இருக்கின்றது 2015ம் ஆண்டு சட்ட திருத்தம் செய்கின்றபோது அதில் சட்டத்துறை நீதித்துறை பாராளுமன்றம் உட்பட எல்லோரும் தவறு விட்டுவிட்டார்கள் அது ஒரு தவறு.. அது தவறாக இருந்தாலும் ஒரு சட்டம் எனவே அதனடிப்படையில் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று அல்லது புதன்கிழமை அதற்கான தீர்ப்புக்கள் வரலாம் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் 6 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையில்லா பட்டதாரிகளின் போராட்ட இடத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம் ஹிஸ்புல்லாஹ் சென்று பட்டதாரிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அதன்பின்னர் இது தொடர்பாக பட்டதாரிகளின் நியமனக் கோரிக்கை தொடர்பாக கிழக்கு மாகாண அளுநரிடம் பேசுவதாகவும் அவரை சந்திக்க வாய்ப்பு எற்படுத்துவதாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் பட்டதாரிகளுக்க வாக்குறுதியளித்தார். இதன் பின்னர் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முதலில் ஜனாதிபதி தேர்தல் நடக்குமா? என்று சந்தேகம் தேர்தல் திணைக்களம் அறிவிக்கவேண்டும் அதற்கு பின்னர் யார் வேட்பாளர் என்று தெரியவேண்டும் இப்பொழுது ஆட்சியில் இருக்கின்ற ஜனாதிபதி கூட தேர்தலில் போட்டியிடுவாரா என்பது எங்களுக்கு தெரியாது உண்மையில் வேட்பாளர்கள் எல்லோரும் தெரிவு செய்யப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாரை ஆதரிப்பது என தீர்மானம் எடுக்கும்.

அதேவேளை தமிழ் பொது வேட்பாளர் என்பது ஒரு சிறுபான்மை கட்சி சிறுபான்மையைச் சேர்ந்த அடிப்படையில் அவ்வாறு ஒரு தனிவேட்பாளர் போட்டியிடுததால் ஒரு பிரயோசனையும் இல்லை வெறுமனவே இரண்டு இலட்சம் மூன்று இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொள்வதில் எந்தவொரு நன்மையும் இல்லை.

தமிழ் மக்களுக்கு அதிகார பரவலாக்கமம் தொடக்கம் காணிபிரச்சனை போன்ற நிறைய பிரச்சினைகள் வரை நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. இந்த பிரச்சனைகளை தீர்க்க கூடிய வெற்றி பெறக்கூடிய ஒரு வேட்பாளரை அடையாளம் கண்டு அவருக்கு இருக்கின்ற இலட்சக்கணக்கான வாக்குகளை கொடுத்;து அவருடன் உடன்படிக்கையை செய்து அவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தான் நல்ல பொருத்தமானது என்பது என்னுடைய எனது தனிப்பட்ட கருத்து.

2015ம் ஆண்டு சட்ட திருத்தம் செய்கின்றபோது அதில் சட்டத்துறை நீதிதுறை பாராளுமன்றம் உட்பட எல்லோரும் தவறு விட்டுவிட்டார்கள் .மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் 6 வருடம் ஜனாதிபதியாக இருக்க முடியும் எனவும் அதன் பின்னர் நீடிப்பதாக இருந்தால் அவர் பொதுசன வாக்கெடுப்புக்கே அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு போக முடியும் என்று சட்டம் இருக்கின்றது அது ஒரு தவறு அது தவறாக இருந்தாலும் ஒரு சட்டம்.

அதனை அடிப்படையாக வைத்துதான் பதவிக்காலம் இன்னொருவருடம் நீடிக்கப்படுமா ? என உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளனர் இன்று அல்லது புதன்கிழமை அதற்கான தீர்ப்புக்கள் வரலாம் அதன் பின்னர் தான் தெரியவரும் இது சாத்தியமா இல்லையா என்றார்.

(கனகராசா சரவணன்)

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button