News

அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் கடவுச்சீட்டு பெற வருமாறு அமைச்சர் விஜித ஹேரத் மக்களிடம் கோரிக்கை

அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் கடவுச்சீட்டு பெற வருமாறு வெளிவிவகார அமைச்சர் திரு.விஜித ஹேரத் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் கடவுச்சீட்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சமீபகாலமாக கடவுச்சீட்டுக்கான தேவை அதிகரித்துள்ளது என்றார்.

புதிய முறையின் கீழ் அனைத்து அத்தியாவசிய நபர்களுக்கும் கடவுச்சீட்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் கையிருப்பு கிடைத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் பெறப்படும் எனவும் அவர் கூறுகிறார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker