News

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கும் தாக்குதல் நடத்த போவதாக எச்சரிக்கை;நீதிமன்ற வளாகம் தீவிர பாதுகாப்பு கண்காணிப்பில்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின் தொலைபேசிக்கு வழங்கப்பட்ட மர்ம நபரின் தகவலுக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து கடும் சோதனைகளுக்கு பின்னரே நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button