ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மக்களின் செல்வாக்கை இழந்து வருவதால், (சஜித்தின்) ஐக்கிய மக்கள் சக்திக்கே அதிகளவான மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வாக்களிப்பார்கள் ; SJB வேட்பாளர்
மட்டக்களப்பு மாவட்டத்தை வென்று 2 ஆசனங்களைப் பெற்றுக்கொள்வோம் என்கிறார் : வேட்பாளர் எம்.எஸ்.சுபைர்
(றியாஸ் ஆதம்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மக்களின் பேராதரவுடன் பாராளுமன்ற தேர்தலில் மாவட்டத்தை வென்று இரண்டு ஆசனங்களைப் பெற்றுக்கொள்வோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
ஏறாவூர் மக்காமடி வட்டாரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்…
எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி நாடு பூராகவும் அதிகமான ஆசனங்களை கைப்பற்றும். அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஐக்கிய மக்கள் சக்தி மாவட்டத்தை வென்று இரண்டு ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பிரதேங்களில் வாழும் முஸ்லிம் மக்களில் கனிசமானோர் ஐக்கிய மக்கள் சக்திக்கே இம்முறை வாக்களிக்கவுள்ளனர். அத்துடன் தமிழ் பிரதேங்களிலும் சிறந்த வேட்பாளர்களை ஐக்கிய மக்கள் சக்தி களமிறக்கியுள்ளது. நிச்சயமாக அதிகமான தமிழ் வாக்குகளும் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது வட கிழக்கு மக்களின் செல்வாக்கை இழந்து வருகிறது. அக்கட்சி தலைவரின் பிழையான செயற்பாடுகளினால் கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதிகளும் போராளிகளும் கட்சியினை விட்டு வெளியேறி வருகின்றனர். ரவூப் ஹக்கீமின் தலைமைத்துத்தின் கீழ் முஸ்லிம் சமூகம் இதுவரை எந்தவொரு நன்மையினையும் அடைந்துகொள்ளவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இம்முறை ஆசனம் கிடைப்பதற்கான வாய்ப்பில்லை. அந்தக்கட்சிகளுக்கு வாக்களிப்பதனால் எந்தப் பிரயோசனமும் கிடையாது. குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கும் ஆசனங்களில் பெரும்பான்மை இனத்தவர்களுக்கே சந்தர்ப்பம் உள்ளது. மட்டக்கப்பு மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கே வாக்களிக்க வேண்டும் என்றார்.