சாம்பியன் அணிக்கு ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கும் Bakinigahawela Champions League 2024 ஆரம்பமாகிறது.

Bakinigahawela Champions League 2024
Bakinigahawela ஜின்னா விளையாட்டுக் கழகமானது இம்மாதம் (ஜூலை) 20 மற்றும் 21 ஆம் தினங்களில் “Bakinigahawela Champions League” கிரிக்கெட் சுற்றுத் தொடர் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது.
இத்தொடர் Medagama RM. Gunasekara மைதானத்தில் பகல் – இரவு போட்டியாக நடைபெற உள்ளது.
இச்சுற்றுத் தொடருக்கு பிரதம அதிதியாகவும் சிறப்பு விருந்தினராகவும் முன்னால் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவரும் உலகக்கோப்பை சாம்பியனுமான திரு. அர்ஜுன ரணதுங்க அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
முதல் இடத்தை பெரும் அணிக்கு 100 000/= பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் இரண்டாம் இடத்தை பெரும் அணிக்கு 50000/= பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்படும். இச்சுற்றுத் தொடரை # Dron machan முகநூல் பக்கத்தினூடாக நேரடியாக பார்வையிடலாம்.
மேலும் இக் கிரிக்கெட் தொடரானது விளையாட்டு ஆர்வம் மற்றும் சமூக நல்லிணக்கம் என்பவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகளவிலான விளையாட்டுக் குழுக்கள், பாரிய பார்வையாளர்கள் என வெகு விமர்சையாக நடத்த முடிவு செய்துள்ளோம்.
Jinnah Sports Club
Bakinigahawela
Bibile
0767254154
0769172752

