கிரியல்லவின் மகள் தொடர்பில் லால் காந்த தெரிவித்த கருத்திற்கு கண்டனம் !!
சமகி ஜன பலவேக கண்டி மாவட்ட வேட்பாளர் சமிந்திரானி கிரியெல்ல தொடர்பில் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற வேட்பாளர் கே.டி. லால்காந்த அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பதாக சமகி ஜன பலவேக தேசிய பட்டியல் வேட்பாளர் திருமதி லிஹினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக திரு.லால்காந்த பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் சமிந்திரனியால் ஒட்டப்பட்ட சுவரொட்டி தொடர்பில் லால்காந்த அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
பெண்ணிய அரசியல் மற்றும் பெண்களின் கண்ணியம் குறித்து பேசும் இதுபோன்ற அறிக்கைகளை தேசிய மக்கள் படை அங்கீகரிக்குமா என்று தான் கேட்கிறேன் என்றார்.
கிரியல்லவின் மகள் ஜம்பு பழம் போல உள்ளதாகவும் அவரை மீண்டும் பார்க்க தோன்றுவதாகவும் அவரின் போஸ்டரை தான் வாகனத்தை நிறுத்தி பார்த்ததாகவும் கூறிய கருத்துக்கு கண்டனம் எழுந்துள்ளது.