News
தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த சோகம் 😰
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை, பியசேனபுர பகுதியில் 2 வருடங்கள் மற்றும் 6 மாதங்களேயான குழந்தையொன்று தண்ணீர் என நினைத்து அமிலம் (அசிட் திராவகம்) குடித்ததில் உயிரிழந்துள்ளது.
தெல்தோட்டை நகரிலுள்ள தங்க வியாபார நிலையமொன்றுக்கு தனது குழந்தையுடன் தந்தையொருவர், சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த அசிட்டையே குழந்தை அருந்தியதாக தெரியவந்ததையடுத்து குழந்தை தெல்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. எனினும், குழந்தை உயிரிழந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்