News
கண்டி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரால் இலங்கைக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட African Serval இன பூனை
African Serval இன பூனை ஒன்று ரஷ்யாவிலிருந்து சரக்கு விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்க சர்வல் பூனை உரிய அனுமதியின்றி இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
கண்டியைச் சேர்ந்த ஒருவரே இந்த பூனையை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்ட ஆப்பிரிக்க சேர்வல் பூனை இலங்கையின் fishing cat இன பூனையைப் போன்றது.
ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவதால் ஆப்பிரிக்க சர்வல் பூனைக்கு அதிக Demand உள்ளது.