News
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் மற்றுமொரு கார் மீட்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் ஃபோர்ட் ரக கார் ஒன்று, கொட்டாவ – பன்னிபிட்டிய லியனகொட பிரதேசத்தில் உள்ள கராஜ் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, நுகேகொட பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த கார் கடந்த பெப்ரவரி மாதம் முன்னாள் அமைச்சரின் சாரதி ஒருவரினால் கேரேஜுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அப்போது அங்கு பதிவு எண் பலகைகள் இல்லை என, கேரேஜ் உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.