News
துபாயில் இருந்து 76 கிலோ ஏலக்காய் கொண்டுவந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
நேற்று (1) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விமான நிலைய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஏலக்காய் தொகை ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 76 கிலோ 300 கிராம் ஏலக்காய் மற்றும் 08 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 12 ஐ வசிப்பிடமாக கொண்ட 48 வயதுடையவர் என்பதுடன் விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்