News

மத்திய கிழக்கு நாடுகளுக்கான தனது விமான சேவைகளை  வரையறுக்கப்பட்ட அடிப்படையில் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்தது

துபாய் வான்பரப்பு பகுதியளவில் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கான தனது விமான சேவைகளை அளவிடப்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பிலிருந்து துபாய் நோக்கிய UL231 விமானமும், துபாயிலிருந்து கொழும்பு நோக்கிய UL232 விமானமும் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இன்று இயக்கப்படும்.
சேவைகள் படிப்படியாக வழமைக்குத் திரும்பும் நிலையில், பயணிகளின் பாதுகாப்பிற்கே தங்களின் முன்னுரிமை வழங்கப்படும் என அந்த விமான சேவை நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button