News

எமது உரிமைகளைப் பாதுகாக்கவும், சூழ்நிலையை தைரியமாகவும், சாணக்கியமாகவும் கையாள்வதற்கு அரசியல் அனுபவமிக்க, சட்ட அறிவும் கொண்ட ரவூப் ஹக்கீமின் பாராளுமன்ற பிரவேசம் இன்றியமையாதது

By: எம்.என்.எம். யஸீர் அறபாத் (பீ.ஏ) – ஓட்டமாவடி.

கடந்த காலங்களில் பேரினவாதிகள் சிறுபான்மையினரின் உரிமைகளை படிப்படியாக பறித்துக்கொள்ள முயற்சித்தபோது சிறுபான்மை கட்சி தலைவர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மறைந்த தலைவர் சம்பந்தன் ஐயா,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் உற்பட சிறுபான்மைத் தலைவர்கள் கூட்டாக செயற்பட்டு அவற்றை முறியடித்தார்கள். இன ரீதியாக மக்களை பிரித்து காரியம் சாதிக்க முற்படும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இன ஒற்றுமையோடு எல்லா இனங்களோடும் நல்லிணக்கத்தோடு பழகக்கூடியவராக ரவூப் ஹக்கீம் ஆரம்பம் தொட்டு இன்றுவரை செயற்பட்டு வருகிறார்.

பாராளுமன்றத்திலும் முஸ்லிம்களுக்கு மாத்திரம் ரவூப் ஹக்கீம் குரல் கொடுக்கவில்லை, ஏனைய இனத்தவர்களின் பிரச்சினைகளையும் பாராளுமன்றத்தில் பேசி, அரசாங்கத்தின் கவனத்திற்கும் கொண்டுவந்திருந்தார்.

ஒரு முறை மலையக மக்களின் வாழ்வியல் துன்பங்களையும்,அதிலும் பெண்கள் படும் கஷ்டங்களையும், சிசு இறப்பு வீத அதிகரிப்பு,போசாக்கான உணவு இன்மை, தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களின்றி அரசாங்கத்தால் கிடைக்கும் நலன்களைக் கூட பெற்றுக்கொள்ளமுடியாத சூழ்நிலையில் அந்த மக்கள் இருக்கிறார்கள். இந்த நாட்டில் எல்லோரும் அனுபவிக்கும் வாய்ப்புகள்,வசதிகள் அந்த மக்களுக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார்.

இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் பிறர் நலன் நாடி, தனக்கான சந்தர்ப்பங்களில் உரிய இடங்களில் குரல் கொடுத்ததோடு, இவருடைய இவ்வாறான நல்ல செயற்பாடுகளால் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோது சகோதர இனத்தைச் சேர்ந்த  பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தார்கள்.

இவ்வாறான ரவூப் ஹக்கீமின் அனுகு முறைகளும்,சகோதர இனத்தவர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் நன்மதிப்புகளும் ரவூப் ஹக்கீம் ஒரு இனவாதி என முத்திரை குத்த பலர் முயற்சித்தும் அவை எடுபடாமல் இருப்பதற்கு காரணம்.


ரவூப் ஹக்கீம் ஒரு மாவட்ட பிரதிநிதி மட்டுமல்ல, இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவுடைய தலைவர் என்பதை யாரும் மறப்பதற்கோ,மறைப்பதற்கோ இல்லை.

ரவூப் ஹக்கீம், தனது ஆளுமையூடாக ஒரு பலமான தலைவராக தன்னை கட்டமைத்துக் கொண்டார்.  அதனால்தான் வெளிநாட்டு அரச தலைவர்கள் முதல் அந்த நாட்டு தூதுவர்கள் வரை ,அதேபோல் சர்வதே நிறுவனங்களான ஐ.நா சபை பிரதிநிதிகள், மனித உரிமை தொடர்பான சர்வதேச அமைப்புக்கள் என பலரும் அடிக்கடி ரவூப் ஹக்கீமை நேரில் சந்தித்து கலந்துரையாடி வருகிறார்கள்.

சிறுபான்மை தலைவர்கள் வரிசையில், குறிப்பாக முஸ்லிம் தலைவர்கள் என்று நோக்கும் போது இவ்வாறான இராஜதந்திர ரீதியான சர்வதேச உறவுகளைக் கொண்ட நபராக,தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக ரவூப் ஹக்கீம் மாத்திரம் காணப்படுகிறார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த பின்னர் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற தோரணையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போது பலர் மௌனித்து,அச்சப்பட்டிருந்த சூழ்நிலையில் சர்வதேச ஊடகங்களினூடாக இஸ்லாம் ஒரு போதும் தீவிரவாதத்தை போதிக்கும் மார்க்கமல்ல, முஸ்லீம்கள் தீவிரவாதிகளுமல்ல என  வாதிட்டார்.

பாராளுமன்றத்திலும் தேடுதல் வேட்டை என்ற போர்வையில் முஸ்லிம் பிரதேசங்களில் தேவையற்ற அச்சங்களை தவிர்க்கவும்,ஊடகங்களை கூட்டிச் செல்லும் போது முஸ்லிம்களின் வீடுகளில் காய்கறி வெட்டும் கத்திகளையும் ஊடகங்கள் பூதாகரமாக கட்டுவது தேவையில்லாத குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதை உரத்துச் சொன்னார்.
அதன் பின்னர் ஜனாதிபதி ஊடகங்களை தவிர்ந்துகொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இனவாதத்தினால் பல பிரதேசங்களில் முஸ்லிம்கள் தாக்குதல்களுக்கு உற்பட்ட போது இரவில் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்த நிலையில் பேருவளை பிரதேசத்திற்கு சென்றார். அழுத்கம இனவாதிகளால் தாக்கப்பட்டபோது அவை மேலும் முன்னேறிச் செல்வதைத் தடுப்பதற்காக நான்கு நாட்களாக தூக்கமின்றி இரவு முழுவதும் வீதியோரங்களில் கண்காணிப்புகளில் ஈடுபட்டு தடுத்தார். சர்வதேச ஊடகங்களில் பேசி, இவ் விடயத்தி்ல் சர்வதேச சமூகத்தையும் திரும்பி பார்க்கச் செய்தார்.

இவ்வாறு முஸ்லிம் சமூகத்திற்கு நடந்த அத்தனை அநீதிகளை ஆவணப்படுத்தி ஐ.நா சபை வரை கொண்டு சென்றார்.
என்ன செய்தார் என கேட்பவர்களுக்கும் நன்மை செய்தவராக ரவூப் ஹக்கீமின் பணிகள் இருந்தது என்பது நிதர்சனமான உண்மையாகும்.

தற்போது அமையவிருக்கும் பாராளுமன்றமாக இருக்கலாம், இடதுசாரி ஆட்சியாக இருக்கலாம்  ,இவற்றினூடாக முஸ்லிம் சமூகத்ததிற்கு எத்தகைய பாதிப்புகள்,சவால்கள் வரும் என்பதை யாரும் ஊகிக்கவும் முடியாது, ஏனெனில் ,இது இலங்கைக்கு புதிதான இடதுசாரி ஆட்சியாகும். ஆனாலும் இதில் பெரும் பகுதியாக அங்கம் வகிக்கும் மக்கள் விடுதலை முன்னணி (JVP) இன் போக்கு கடந்த காலங்களில் ஆரோக்கியமாக இருக்கவில்லை, முஸ்லிம்களின் மார்க்க சட்டங்களில் தேவையில்லாத கருத்துக்களையும்,ஏனைய விடயங்களில் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்கள் என்பதும் அவ்வாறான நபர்களும் இம் முறை தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் தெரிவு செய்யப்படலாம் என்ற நிலையில் முஸ்லிம் சமூகம் நிதானமாக சிந்தித்து முடிவெடுக்கும் தருணமாக இந்த தேர்தல் அமைந்திருக்கிறது.

நாடு இன்னும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து விடுபடாத சூழ்நிலையில், வெளிநாடுகளின் ஆதிக்கமும் இலங்கையில் இருக்கும் என்பது தெளிவாக இருக்கும் நிலையில், வெளிநாடுகளை திருப்தி படுத்த அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முற்படும் போது நாடு,மக்கள்,சமூகம் என பாதிப்புகளுக்குள்ளாகலாம் அப்போது எமது உரிமைகளைப் பாதுகாக்கவும், சூழ்நிலையை தைரியமாகவும், சாணக்கியமாகவும் கையாள்வதற்கு அரசியல் அனுபவமிக்க, சட்ட அறிவு கொண்ட, சர்வதேச உதவிகளை பெறக்கூடிய, அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடிய, நமக்காக நடுநிலையான சகோதர  இனத்தைச் சேர்ந்தவர்களை குரல் கொடுக்கச் செய்யும் தலைவரான ரவூப் ஹக்கீமின் பாராளுமன்ற பிரவேசம் என்பது இன்றியமையாத ஒன்று என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளலாம்.

எனவே, சிலரை திருப்தி படுத்தவும்,காழ்புணர்ச்சி காரணமாகவும்  ரவூப் ஹக்கீமை தோற்கடிக்க சிலர் கண்டியில் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் இந்த முயற்சி ரவூப் ஹக்கீம் என்ற தனி நபரை தோற்கடிக்கும் முயற்சியல்ல ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தோற்கடிக்கும் முயற்சி என்பதை புரிந்து கொண்டு, தனக்கு என சிந்திக்காது சமூகத்திற்கு என்று சிந்தித்து சதிகளை முறியடித்து ரவூப் ஹக்கீமின் வெற்றியை உறுதிப்படுத்த டெலிபோன் சின்னம் 2 ஆம் இலக்கத்திற்கு புள்ளடி  இடுவோம்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button