சிங்கள மொழியில் கலக்கும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகள் – மாகாண மட்டத்தில் வென்று தேசிய போட்டிக்கும் தெரிவாகினர்
இரண்டாம் தேசிய மொழி (சிங்கள) போட்டி நிகழ்ச்சியில் மஹ்மூத் மாணவிகள் முதலாம் இரண்டாம் நிலைகள் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவு.
நூருல் ஹுதா உமர்
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட இரண்டாம் தேசிய மொழி (சிங்கள) தினப் போட்டி – 2024 நிகழ்ச்சிகள் மட்/மட்/ நல்லையா வித்தியாலயம் பிள்ளையாரடி, மட்டக்களப்பு இடம்பெற்றது.
இந்த போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) சார்பாக தரம் 06 தொடக்கம் 09 பிரிவு வரையான மாணவிகள் பேச்சு, வாசிப்பு, நிகழ்ச்சிகளில் பங்கேற்று முதலாம், இரண்டாம் நிலைகளை பெற்று மூன்று மாணவிகள் தேசிய மட்ட இரண்டாம் தேசிய மொழி (சிங்கள) போட்டி நிகழ்ச்சிக்கு தெரிவு செய்யப்பட்டு கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அதில் தரம் – 08 மாணவி ஐ.ஐ. சுமையா எழுத்து போட்டியில் கலந்து கொண்டு முதலாம் நிலையும், தரம் – 06 மாணவி எம்.ஜ. அமீஹா சஹ்தா எழுத்து போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் நிலையும், தரம் – 09 மாணவி ஜீ.எப். சுக்னா ஹானிம் எழுத்து போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் நிலையும் பெற்றுள்ளனர்.
தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கான தேசிய மட்ட இரண்டாம் தேசிய மொழி (சிங்கள) தினப் போட்டி – 2024 நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 03 ஆம் திகதி கல்வி அமைச்சு, இசுறுபாய பத்தரமுல்ல கொழும்பில் இடம்பெற உள்ளது. மொழிப் பிரயோகமும் கிரகித்தலும் போட்டி நிகழ்ச்சியில் மாணவி வெற்றி பெற உற்சாகமளிக்கும் நோக்குடன் குறித்த மாணவிகளை அதிபர் அலுவலகத்துக்கு நேரடியாக அழைத்து கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) அவர்களால் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
மாகாண மட்ட இரண்டாம் தேசிய மொழி (சிங்கள) போட்டி நிகழ்ச்சிக்கு மாணவிகளை திறம்பட வழிப்படுத்திய சிங்கள பாட இணைப்பாளர் ஏ.எம்.எம். அணிஸ் சிங்கள பாட ஆசிரியர்களான ஏ.எம். நெளஷாத், எம்.ஜ.எப். பாத்திமா சபானா, பாத்திமா ஸபினா மற்றும் சாதனை படைத்த மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அதிபர் தெரிவித்தார். இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி பணிமனையின் சிங்கள பாட ஆசிரிய ஆலோசகர் ஆர். ஸ்ரீஸ்கந்தராஜா பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
UMAR LEBBE NOORUL HUTHA UMAR